சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சத்தம் கேட்ட ரியாதின் இராஜதந்திர வலயத்திற்கு (Diplomatic Zone) மேலாக கரும்புகை எழுவதை இருவர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.













