ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் தோல்வி




ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

குறித்த பிரேரணைக்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.