கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
கேகாலை - கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மொலகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்













