அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, 47 வயதான சமிந்திகா ஜயவர்தன மற்றும் அவரது துணைவரான 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் ஆகியோரின் சடலங்கள் இந்த வார முற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விக்டோரியாவின் ஹேர்ன்ஸ் ஓக், மெக்ராத்ஸ் டிராக்கில் அமைந்துள்ள வீட்டிலேயே குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வீட்டிற்குள் இருவரது சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அயலவர்கள் தெரிவித்ததாவது, சனிக்கிழமை இரவு இரண்டு பலத்த சத்தங்கள் கேட்டதாக கூறியுள்ளனர். ஆரம்பத்தில் அவை பட்டாசு வெடித்த சத்தம் அல்லது நரிகளை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் என அவர்கள் கருதியதாகவும் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.













.webp)