பஸ்களுடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி


பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி தடம் மாறிச் சென்று எதிர் திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் இன்று (18) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.