தேசிய மட்டப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு மாணவன் சாதனை



கல்வி அமைச்சினால் 2025-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான சமூக விஞ்ஞானப் போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் கு. டனுஸ்காந் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 


தரம் 7-இல் கல்வி பயிலும் இம்மாணவன், வலய மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியிருந்தார்.


 பின்தங்கிய கிராமப்புற பாடசாலையொன்றில் இருந்து இவ்வாறான ஒரு தேசிய மட்டச் சாதனையாளர் உருவானது கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இம்மாணவனின் இந்த வியக்கத்தக்க வெற்றிக்காக வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர, பாடசாலை அதிபர், வழிகாட்டிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.