சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !


சிலாபம், இலிப்பதெனிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (10) இலிப்பதெனிய பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 60 லீற்றர் (சுமார் 80 மதுபான போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இலிப்பதெனிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.