(ரவி ப்ரியா)
500 வருடங்களுக்கு மேற்பட்ட தொன்மையும் ஏழு அடுக்கு இராஜகோபரமும் அத்தனை ஆகம விதிமுறை பொருந்திய பெரியகல்லாறு சிறி சர்வார்த்த சித்தி விநாயகர் தேவஸ்தான பிரமோற்சவப் பெருவிழா இன்று வியாழன் (18) காலை திருக்கோடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இதன் ஆரம்ப வைபவமாக கடலம்மன் அருள்மிகு கடலம்மன் ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆலய வண்ணக்கர் செ.கனகசுந்தரத்தினால் ஊர்வலமாக எடுத்து வருவதைப் படங்களில் காணலாம்.
இவ்வாலயத்தின் அமைவிடம் எம்பெருமானால் வில்லூன்றி அடையாளப்படுத்தப்பட்டதும் ஆலய புனருத்தாரண பணியின்போது பிள்ளையார் சிலையொன்று தவறி தென்னைமர உயரத்தில் இருந்து பிரதான தார் வீதியில் விழுந்த போதும் சிறு கீறல் கூட இல்லாமல் உருக்குலையாமல் இருந்தது அற்புதமாகவே பக்தர்களால் கணிக்கப்படுகின்றது.
அச்சிலையை ஆலயத்தின் உள்ளக பின்புறத்தில் விசேட பீடம் அமைத்து பூஜிப்பட்டு வருவதைக் காணலாம்.


.jpeg)




.jpg)

.webp)
.webp)



.webp)