அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்;
அனைத்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களிலும் மாலை 3 மணிக்கு அனைத்து ஏசிகளும் அணைக்கப்படவேண்டும். தனியார் துறையினரும் இதனைக் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இரவு 8 மணிக்குப் பின்னர் வர்த்தக விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சார விளக்குகள் மற்றும் திரைகள் அணைக்கப்படவேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களினால் நிர்வகிக்கப்படும் வீதி விளக்குகளை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அணைத்து வைப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரிய விழாக்களை நடத்தும்போது, தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.













