இலங்கையின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை !


கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.