குவைத்தின் முபாரக் அல் கபீர் பகுதியிலிருந்து தென்கிழக்காக 30 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த எண்ணெய் கசிவு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், வெடிப்புச் சம்பவத்துடன் எவ்வித தீ விபத்துக்களும் பதிவாகவில்லை எனவும் UKMTO குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.













