![]() |
ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடைபெறாதவரை அந்த நாடுகளுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையில் அவர், கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார். மேலும், பிராந்திய நாடுகளுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் ஈரானுக்கு இல்லை என்றும் கூறினார்.
இந்த முடிவு ஈரானின் தற்காலிக நிர்வாகக் கவுன்சிலின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய மோதல் சூழ்நிலையில் அண்டை நாடுகளுடன் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இதை காணலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அண்டை நாடுகளில் உள்ள தளங்களிலிருந்து ஈரானின் நிலப்பரப்புக்கு தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி பெசேஷ்கியான் எச்சரித்துள்ளார்












.webp)
