இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றதாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு சத்தியக்கடதாசியை சமர்ப்பித்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட மிரட்டல்களினால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலை பயன்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரியால் இந்த அறிக்கை பெறப்பட்டதாக கபில சந்திரசேன வலியுறுத்துகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களோ அல்லது அவர்களின் செல்வாக்கு குறித்த தகவல்களோ அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவை தன்னால் தன்னார்வமாக வழங்கப்பட்டவை அல்ல என அவர் அந்த சத்தியக் கடதாசியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு இருவேறு சந்தர்ப்பங்களில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கபில சந்திர சேன தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


.webp)



.jpg)
.webp)

.webp)


.webp)
