
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெயை “கைப்பற்ற வேண்டும்” என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும், அந்த நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக இருக்கும் கார்க் தீவை அமெரிக்கா “மிக எளிதாக கைப்பற்ற முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைனான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு வழங்கிய பேட்டியில், “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதே” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் வெளியாகும் நேரத்தில், ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.












