உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி


வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (18) உழவு இயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றபோதே இந்தத் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.