சீரற்ற காலநிலை : நாடு முழுவதும் 88 வீடுகள் சேதம்!


தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 7 மாவட்டங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவிலான சேதங்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

களுத்துறை: 40 வீடுகள்

மட்டக்களப்பு: 25 வீடுகள்

இரத்தினபுரி: 09 வீடுகள்

காலி: 05 வீடுகள்

கொழும்பு: 05 வீடுகள்

மொனராகலை: 04 வீடுகள் என மாவட்ட ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.