இந்நிகழ்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு அதிதிகளாக கல்வி நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் S. திருச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக உடற்கல்விப் ஆசிரியர் ஆலோசகர் S. அரியதாஸ் மற்றும் உடற்கல்விப் பாடத்துறைக்கான வளவாளர் S. சிறிமுருகன், ஓய்வு நிலை அதிபர்கள் ஆகியோரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன் போது, பாடசாலை மாணவர்களுக்கிடையில் அஞ்சல் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றமையுடன் 12பாடசாலைகளின் அணிநடை மரியாதை போட்டியும் இடம்பெற்றன. மற்றும் மூன்று பாடசாலைகளின் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் ஆசிரியர்களுக்கான, அதிபர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் அவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.












































.jpg)



.png)

-Picsart-AiImageEnhancer.png)

