வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு


 வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆற்றில் படகினை செலுத்திக்கொண்டிருந்த நபரொருவர் வியாழக்கிழமை காணாமல்போயிருந்தார்.

அந்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன நபரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (15) கரையொதுங்கியுள்ளது.

செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.