வெசாக் கொண்டாட்டங்களில் பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை..


 எதிர்வரும் வெசாக் கால அலங்காரங்கள் மற்றும் தான நிகழ்வுகளின் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் மத்திய சுற்றாடல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் சில பொருட்களின் விற்பனையும் பயன்பாடும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மாற்று பொருட்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.