மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது திசை மாற்றமின்றியும் வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகள் சாதாரண நிலையில் இருந்து ஓரளவுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அக் கடல் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



.jpg)



.png)

-Picsart-AiImageEnhancer.png)

