கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (9) காலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடைய குறித்த நபர், குட்டையான தலைமுடியைக் கொண்டிருப்பதுடன் தாடி வளர்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இறுதியாக கறுப்பு நிற அரைக்காற்சட்டையும், கபில நிற சட்டையும் அணிந்துள்ளார். பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




.jpg)



.png)

-Picsart-AiImageEnhancer.png)

