
இந்தியக் கடற்படைக் கப்பலான “சுனைனா”, இன்று வெள்ளிக்கிழமை (15) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியக் கடற்படையின் நட்புறவுப் பாலங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இக்கப்பல் வருகை தந்துள்ளது.
இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கடற்படையினருடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியன்மார், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இக்கப்பலில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.













