.png)
தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 300 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும், 50 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையகக் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் இருவரும் இந்தப் பழங்கால சிலையைக் கண்டிக்கு எடுத்துச் சென்று, அது தங்கத்தினாலானதா? என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளனர்.
அப்போது இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிலை ஏதேனும் ஒரு விகாரையில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தப் பழங்கால புத்தர் சிலை தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தொல்பொருள் ஆய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.












