தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தொடர் விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளன.

மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.