
ஏறாவூர்–செங்கலடி பிரதான நீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக, ஏறாவூர், செங்கலடி மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவை முழுமையாக நிறைவடைய சுமார் 12 மணித்தியாலங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், நீர் விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் என மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



.jpg)








