மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து : தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு



மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சிறிய காயங்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.