
அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவ்வ நகருக்கு அருகில், காணி ஒன்றுக்கு அருகில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த காணியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, காணிக்குள் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண், தேங்காய் பொறுக்குவதற்காக சட்டவிரோதமான முறையில் குறித்த காணிக்குள் நுழைந்த போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், குற்றச் செயலுடன் தொடர்புடைய மனிதப்படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த காணியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அலவ்வ பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







.jpeg)
.jpeg)



