
அரசாங்கத்தினால் நெல் கிலோவொன்றுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவதாயின், இந்த இந்த உத்தரவாத விலைச் சூத்திரத்தை உருவாக்கும் போது விதை நெல், உர விலை, விவசாய இரசாயனப் பொருட்கள், இயந்திர உபகரணங்களின் விலைகள் உள்ளிட்ட நெல் கிலோவொன்றை உற்பத்தி செய்வதற்கு ஏற்படும் செலவைக் கணிப்பிடும் சூத்திரம் மற்றும் அச்சூத்திரத்தின்படி உத்தரவாத விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் வருடாந்த உரத் தேவையில் அரசாங்கத்தின் கொள்வனவுகள் மற்றும் தனியார் துறையின் கொள்வனவுகள் மூலம் அது எந்தளவுக்கு நிவர்த்தி செய்யப்படுகிறது என்பதை அறிய விரும்புவதாகவும், தற்போதைய யுத்த சூழ்நிலையினால் உரத்தின் விலை அதிகரித்துள்ளதால், யுத்த சூழ்நிலைக்கு முன்னரும் பின்னரும் உரங்களின் விலைகளை சமர்ப்பிக்குமாறும், ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு எமது நாட்டுக்கு உர விநியோகத்தில் ஏற்படும் தாக்கத்தின் சதவீதத்தை சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.
உலக உர விநியோகத்தில் 20-30% அளவானது ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே இடம்பெறுகின்றன. இந்த உர விநியோகத்தில் பிரச்சினைகள் இல்லை என்று கூறப்பட்டாலும், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் தனியார் துறையினரால் வழங்கப்படும் உரங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உர விலை தொடர்பாக ஒரு பிரச்சினை உருவாகி காணப்படுகின்றன. உரங்களின் தரம் குறித்து அரசாங்கம் பின்பற்றும் தரநிலை என்ன மற்றும் ஒரு ஹெக்டெயார் பயிர்ச்செய்கைக்கு எவ்வளவு உர அளவு வழங்கப்படுகிறது என்பதை அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.
பொதுவாக ஒரு ஹெக்டெயாருக்கு 300 கிலோ கிராம் உரம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், அது 400 கிலோ கிராமாக இருக்க வேண்டும் என விவசாயிகள் முன்மொழின்றனர். உரம், (Mada )ஒரு ஹெக்டயாருக்கு 50 கிலோ வழங்கப்பட்டாலும் அது 150 கிலோவாக இருக்க வேண்டும் என விவசாயிகள் கூறுவதனால், அரசாங்கம் வழங்கும் அளவை தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.







.jpeg)
.jpeg)



