இ.வினித்தாவின் நெறியாள்கையில் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் கண்ணகி நிருத்தியாலயத்தின் நாட்டியாஞ்சலி

(சித்தா)

கண்ணகி நிருத்தியாலயத்தின் நாட்டியாஞ்சலி பரதமே நம் பாரம்பரியம் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் இனிய கலை விழா வெல்லாவெளி பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கண்ணகி நிருத்தியாலயத்தின் தலைவி ஜெ.சுமேந்திராஜா தலைமையில் 14.06.2026 இல் நடைபெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் கலந்து கொள்ள சிறப்பு அதிதிகளாக கலாசார மையத்தின் மேம்பாட்டு அதிகாரி அ.தேவரூபன், எழுத்தாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான த.விவேகானந்தம், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன், போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் டிமாலினி நிராஜ், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஜயந்தா அரங்கன் ஆகியோரும் மற்றும் கௌரவ அதிதிகள், பெற்றோர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கண்ணகி நிருத்தியாலய நடன ஆசிரியர் இ.வினித்தாவின் ஆற்றுகை நிகழ்ச்சி நெறியாள்கையில் புஷ்பாஞ்சலி, அம்மன் நடனம், காவடிச்சிந்து, ஓம் சக்தி நடனம், கண்ணன் நடனம், பாம்பு நடனம், நவராத்திரி நடனம், சிவநடனம் போன்ற ஆற்றுகைகள் இடம்பெற்றன. அத்துடன் மாணவர்களைக் கௌரவித்தல், அதிதிகளைக் கௌரவித்தல் போன்ற விசேட நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன.