காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு வெளியிலுள்ள மின்மாற்றியில் தீ விபத்து



காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியிலிருந்த மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவிற்கான மின்சார விநியோகம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.