மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மிகச் பக்திப் பூர்வமாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ யோக நாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமைகதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு வைபவம் நேற்று மாலை இடம் பெற்றது கடந்த புதன்கிழமை கல்யாண கால் வெட்டும் வைபவம் தொடர்ந்து கள்ளிவெட்டுதல் விநாயகர் பானை சடங்கு தீக்குளி மூட்டுதல் சடங்கு என்பன இடம் பெற்று

 நேற்று மாலை இறுதிநாள் சடங்கு மற்றும் தீமிதிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


 இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளான பக்தர்கள் தீப்பாய்ந்து, அம்மனுக்குத் தங்களின் நேர்த்திக்கடன்களை மிகச் சிரத்தையுடன் நிறைவேற்றினர்.

 குடிநீர் மற்றும் அன்னதானம் ஏனைய வசதிகள் அனைத்தும் ஆலய நிருவாக சபையினரால் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

.