
அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரை பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே, அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







.jpeg)
.jpeg)



