
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய வீதிகள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, நோயாளர்களிடம் விரைவாக சென்றடைய இச்சேவை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, நோயாளருக்குத் தேவையான உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இச்சேவையில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதற்காகச் விசேடப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் அவசரப் பிரிவுகளில் களமிறக்கப்படுவர்.
அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய நகர்ப்புறங்களில் இச்சேவை முதன்மையாகச் செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்பகட்டமாக கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpg)





.jpg)


