.jpg)
சுகாதாரத்துறையின் மனித வள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்துக்குப் பின்னர், சுகாதார பணி உதவியாளர் உட்பட பல துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் மேல் மாகாணத்தில் 627 பேருக்கு சுகாதார பணி உதவியாளருக்கான நியமனங்கள் முதற்கட்டமாக டவர் மண்டபத்தில் வைத்து நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட முறைப்படுத்தப்பட்ட நேர்காணல்களை வெற்றிகரமாக முடித்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, ஜூலை 4ஆம் திகதி முதல் குழுவாக 627 சுகாதார சேவை உதவியாளர்கள், இரண்டாவது குழுவாக 600 சுகாதார சேவை உதவியாளர்கள், ஆகஸ்ட் 1ஆம் திகதி 3ஆவது குழுவாக 762 சுகாதார சேவை உதவியாளர்கள், அத்துடன் 295 நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 மேல் நிலை உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜூலை 16ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கும் மேலதிகமாக நியமனங்களை வழங்குவதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.







.jpg)
.jpg)




.png)