தரம் 5 புலமைப்பரிசில் : இரண்டாம் சுற்று மேல்முறையீட்டு பாடசாலை விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியீடு

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் சுற்று மேல்முறையீடுகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கான பாடசாலை ஒதுக்கீட்டு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் ஊடகப் பிரிவினால் வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல்முறையீடுகளைச் சமர்ப்பித்த மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலைகள் குறித்த விபரங்களை https://g6application.moe.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பரிசோதித்துக் கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.