குடும்பத் தகராறில் 58 வயது நபர் உயிரிழப்பு; சகோதரர் கைது


வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு குடும்பத் தகராறு காரணமாக 58 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, ஆத்திரமடைந்த சகோதரர் தடியொன்றால் தாக்கியதில் இந்த மரணம் சம்பவிக்கப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.

இக்கொலை குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.