
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) இந்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






.jpg)



.jpg)

.jpg)
