பசறை மவுசாகலை மலையில் திடீர் தீ


 பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை மலையில் நேற்று ஞாயிற்றுக்கிழழை (05) இரவு திடீரென தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.

மலைப் பகுதியில் தீப்பிடித்துள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மீட்புக்குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்து காரணமாக எவ்வித உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.