
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை அநுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பதற்காகப் பதப்படுத்தப்பட்டிருந்த நான்கு கோடா பீப்பாய்கள், 80 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




.jpg)





.jpg)


