(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், வண்டுகள் மொய்த்த 192 கிலோகிராம் அரிசியை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் இன்று (03) ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மே 27 ஆம் திகதி, பொது சுகாதார பரிசோதகர்களான ரவிகரன் மற்றும் த. ரிஷிகோபன் ஆகியோர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குறித்த அரிசி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று (03) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிவான் கடை உரிமையாளருக்கு ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தரமற்ற மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.








.jpg)
.jpg)




.png)