
சிகிரியா நகருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள், குடியிருப்பு வீடொன்றின் 200 அடி நீள மதிலை இடித்துத் தள்ளி, அங்கிருந்த மரத்திலிருந்த பலாப்பழங்களை உண்டு சேதப்படுத்தியுள்ளன.
நேற்று (29) புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இந்த 03 காட்டு யானைகளும் வீட்டுக் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளன. தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 200 அடி நீள மதிலை முழுமையாக இடித்துத் தள்ளி, மரத்திலிருந்த பலாப்பழங்களை உண்டுள்ளன என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வனவிலங்குத் திணைக்கள அலுவலகம் மிக அருகில் இருந்தும், "தம்மிடம் வாகனம் இல்லை" என்ற காரணத்தைக் கூறி அதிகாரிகள் வர மறுத்துவிட்டதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிகிரியா பகுதியில் நீண்டகாலமாகக் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதனால் தாங்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.




.jpg)





.jpg)


