
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 09.07.2026 திகதி திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று இன்று காலை தீர்த்தோற்சவத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இன்று அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு, சுண்னம் இடித்ததைத் தொடர்ந்து, நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தீர்த்தக் கேணியை அடைந்தார்.
சிவாச்சாரியார்களின் வேதபாராயண முழக்கங்க அபிஷேகம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில், சிவாகம முறைப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.




.jpg)





.jpg)


