தாய்லாந்திலிருந்து வந்த 'பரிசுப் பார்சலில்' ரூ.10.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்



தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு விமான சரக்காக அனுப்பப்பட்டிருந்த பார்சலிலிருந்து ரூ.10 கோடியே 60 இலட்சம் மதிப்புள்ள ஹஷிஷ் உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஜூலை 24 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL405 விமானம் மூலம் வந்த இந்த சரக்கு, பரிசுப் பொருள் (Gift Shipment) என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.608 கிலோ ஹஷிஷ், கஞ்சா மற்றும் ஹஷிஷ் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தெருமுனை சந்தை மதிப்பு ரூ.10 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.