இன்றைய தினம் காலை 6:15 மணியளவில் கேகாலை, கரண்டுபன சந்தைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகனவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 20 பேரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.











.jpg)


