நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை : பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 376 பேர் கைது!



நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் 24 நபர்கள் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய (25) அறிக்கையின்படி, 26,868 நபர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 490 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 148 பேர் உட்பட மொத்தம் 376 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.