நாளை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை



நாட்டின் 07 மாவட்டங்களில் நாளை (18) செவ்வாய்க்கிழமை மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரி்ககை விடுக்கப்பட்டுள்ளன.

பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பக் காரணி கணிசமாக அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் தாகம் இல்லாவிட்டாலும் போதியளவு நீர் மற்றும் இயற்கை பானங்களை அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.

பகலின் கடுமையான வெயில் நேரத்தில் (நண்பகல் வேளையில்) தேவையின்றி வெளியே செல்வதையோ, நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதையோ தவிர்க்கவும்.

திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் பாரமான வேலைகளை நண்பகல் வேளையில் செய்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

இலகுவான, மெல்லிய மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.

வயோதிபர், சிறுவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிவோர் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.