
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாது. அவ்வாறு செல்வதாயின் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்.மக்கள் மத்தியில் செல்வற்கு அரசாங்கத்துக்கு தற்றுணிபு தற்போது இல்லை. நீதிபதிகளின் பதவிக்காலத்தை நிறைவேற்றுவதால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கடுவலை நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (25) வழக்கு விசாரணைக்கு முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரமே அரசாங்கம் முயற்சித்தது, பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பினால் ஒட்டுமொத்த நீதிபதிகளின் பதவிக்காலத்தையும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதால் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் அனைத்து இரண்டு ஆண்டுக்குள் நிறைவடையாது. ஒரு தனி நீதியரசருக்கு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காகவே சகல நீதிபதிகளின் பதவிக்காலமும் அதிகரிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாது.அவ்வாறு செல்வதாயின் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் . நீதிபதிகளின் பதவிக்காலத்தை நிறைவேற்றுவதால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.
அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் ரீதியில் மாற்றுக் கொள்கை உள்ளவர்களை இலக்காகக் கொண்டு அவர்களுக்கு எதிரான அடக்குமுறையை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.



.jpg)

.jpg)
.jpg)


.jpg)
.jpg)
