
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வேளையில் அவ்வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.
பின், அவ்வீட்டினரும் அயலவர்களும் இணைந்து நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும், இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், பல உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் முதலியவை முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)








