பொரளை மாளிகாகந்த பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நிபுணர்கள் குழுவை அமைத்து நாட்டை முன்னேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், சிறைச்சாலை நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் வெளிநாட்டு கடன் செலுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய இணையத் தாக்குதல் சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியதுடன், மக்களின் நிதியைப் பாதுகாக்கவும், கடன் செலுத்தல்களைச் சரியாக நிர்வகிக்கவும் அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தோற்கடித்த சில நாட்களிலேயே மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் அதே சிறைச்சாலையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரு சிறைச்சாலையைக் கூட சரியாக நிர்வகிக்க முடியாத அரசாங்கத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது" எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள் தற்போது வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.














