இளைஞர்களை குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பிளாஸ்டிக் குழாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பேசி மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)










